குருநானக் ஜெயந்தி விழாவில் மோடி பங்கேற்பு

புதுடெல்லி: சீக்கிய மத குருவான குருநானக் தேவின் 553வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, டெல்லியில் தேசிய சிறுபான்மை ஆணையத் தலைவர் இக்பால் சிங் லால்புரா வீட்டில் நேற்று நடந்த பிரார்த்தனை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதில் ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘‘பிரிவினையால் பாதிக்கப்பட்ட சீக்கிய மற்றும் இந்து குடும்பங்களுக்கு குடியுரிமை வழங்கவே குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வர நாங்கள் முயற்சி செய்கிறோம். வெளிநாடுகளில் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் சீக்கிய குடும்பங்களுக்கு சமீபத்தில் குஜராத்தில் குடியுரிமை தரப்பட்டது. சீக்கியர்கள் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் அவர்களின் தாய்வீடு இந்தியாதான்’’ என்றார்.

Related Stories: