அமெரிக்காவில் புயல் காரணமாக 15 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி 10 பேர் பரிதாப பலி: 9 மாத குழந்தை, 8 சிறுவர்கள் மரணம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் கிளாடிட் புயல்  எதிரொலியாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் பெற்றோரால் கைவிடப்பட்ட,  பாதிக்கப்பட்ட  பள்ளி மாணவர்கள் உட்பட பலர் ஷெரீப்ஸ் அசோசியேஷனால் இயக்கப்பட்டு வரும் காப்பகத்துக்கு வேனில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, சூறாவளி வீசிய நிலையில் வாகனம் தீப்பிடித்தது.  இதனால் அடுத்தடுத்து வந்த 14 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கின.   வேன் தீப்பிடித்ததில் அதில் இருந்த  பயணம் செய்த 8 சிறுவர்கள் உயிரிழந்தனர். இதேபோல் மற்றொரு வாகனத்தில் இருந்த இளைஞர் மற்றும் 9 மாத குழந்தை உயிரிழந்தது.  மேலும் விபத்தில் சிக்கிய வாகனங்களில் இருந்த பலர் காயமடைந்தனர்….

The post அமெரிக்காவில் புயல் காரணமாக 15 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி 10 பேர் பரிதாப பலி: 9 மாத குழந்தை, 8 சிறுவர்கள் மரணம் appeared first on Dinakaran.

Related Stories: