பெற்ற மனம் பித்து... பிள்ளை மனம் கல்லு... திருமணம் நிச்சயமான பெண் காதலனுடன் போலீசில் தஞ்சம்: காலை பிடித்து கெஞ்சிய தாயை உதறித்தள்ளினார்

சேலம்: சேலம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் சுந்தரி (23, பெயர் மாற்றப்பட்டுள்ளது). பிஎஸ்சி பட்டதாரியான இவருக்கு பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். கடந்த மாதம் அவரது தாய்மாமனுக்கு நிச்சயம் செய்தனர். இந்நிலையில் நேற்று காலை வீட்டிலிருந்த சுந்தரியை திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேசனில் புகார் செய்தனர். போலீசாரும் விசாரித்து வந்த நிலையில், வீராணம் சுக்கம்பட்டியை சேர்ந்த பட்டதாரி வாலிபர் கோகுல் (25) என்பவர், சுந்தரியை திருமணம் செய்து கொண்டு போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தது தெரியவந்தது.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சுந்தரியின் தாய் அழுது கொண்டு, கமிஷனர் அலுவலகம் ஓடிவந்தார். அங்கு வாலிபருடன் மகள் நிற்பதை பார்த்து கதறி அழுதார். ஓடிச்சென்று மகளின் காலை இறுகப்பிடித்துக்ெகாண்டு தன்னுடன் வருமாறு அழுதார். ஆனால் சுந்தரியின் கண்ணில் கண்ணீர் மட்டுமே வந்தது. மனதை கல்லாக்கிக்கொண்டு தாயின் பிடியை தட்டிவிட்டு கமிஷனர் அலுவலகத்திற்குள் சென்றார்.

காதல் ேஜாடி தஞ்சமடைந்ததையடுத்து, இருவரையும் அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேசனில் விசாரணைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருதரப்பு பெற்ேறாரையும் அழைத்து பேசினர். போலீஸ் ஸ்டேசனிலும் சுந்தரியின் பெற்றோர் மகளை தங்களுடன் அனுப்புமாறு கண்ணீர் விட்டு அழுதனர். ஆனால் திருமணம் செய்தவருடன்தான் செல்வேன் என சுந்தரி அவருடனே புறப்பட்டுச்சென்றார். இருவரும் மேஜர் என்பதால் போலீசார் சட்டப்படி அவர்களை அனுப்பி வைத்தனர்.

Related Stories: