விடிய விடிய கனமழை: தமிழகத்தில் 8 மாவட்ட பள்ளிகளுக்கும், திருவாரூர், நாகை மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை..!!

சென்னை: கனமழை காரணமாக 8 மாவட்ட பள்ளிகளுக்கும், திருவாரூர், நாகை மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளனர். டெல்டா மாவட்டங்களில் வரும் 4ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை உட்பட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை தொடரும்:

சென்னை உட்பட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, நீலகிரி, கடலூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, வேலூர், கரூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: