12 ஆண்டுகளுக்கு பின் பிரேசில் அதிபராக லுலா டா தேர்வு; பிரதமர் மோடி வாழ்த்து

சா பவுலோ: பிரேசில் அதிபர் தேர்தலில் இடதுசாரி தொழிலாளர் கட்சித் தலைவரும் முன்னாள் அதிபருமான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்றுள்ளார். தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கடந்த அக்டோபர் 2ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இதில் தற்போதைய அதிபர் ஜெயிர் போல்சனரோ, இடதுசாரி வேட்பாளருமான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா உள்பட மொத்தம் 9 பேர் போட்டியிட்டனர். லுலா டா ஊழல் வழக்கில் சிறை சென்றதால் கடந்த 2018ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடவில்லை. இதுவே போல்சனரோ வெற்றிக்கு வித்திட்டது. இந்நிலையில், பிரேசில் தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு நேற்று முன்தினம் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் தற்போதைய அதிபர் போல்சனரோ 49.1% வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இடதுசாரி தலைவரும், முன்னாள் அதிபருமான லுலா டா சில்வா 50.9% வாக்குகள் பெற்று 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பிரேசில் அதிபராக உள்ளார். இவர் அடுத்தாண்டு ஜனவரி மாதம் பதவியேற்க உள்ளார். வெற்றி பெற்ற லுலா டாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்தியா, பிரேசில் உடனான உறவை வலுப்படுத்த ஆர்வமுடன் இருப்பதாக மோடி தனது டிவிட்டர் வாழ்த்து செய்தியில் கூறி உள்ளார்.

Related Stories: