பிரேசில் : பிரேசில் அதிபருக்கான தேர்தலில் 50.9 விழுக்காடு வாக்குகளைப் பெற்று 77 வயதான இடது சாரி வேட்பாளர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா வெற்றிபெற்று இருக்கிறார். பிரேசில் அதிபருக்கான தேர்தலில் அதிபர் ஜெயீர் போல்சனரோ மற்றும் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா இடையே கடும் போட்டி நிலவியது. கடந்த 2-ம் தேதி நடந்த தேர்தலில் 2 வேட்பாளர்களும் 50 விழுக்காடு வாக்குகளை பெறவில்லை. பிரேசில் தேர்தல் நடைமுறையின் படி அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 50% அதிகமான வாக்குகள் பெற தவறினால் அதிக வாக்குகளை பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்களுக்கு இடையில் 2-ம் சுற்று தேர்தல் நடத்த வேண்டும்.