ஆர்எஸ்எஸ் காபி பாஜ வெறும் நுரை பிரசாந்த் கிஷோர் வர்ணனை

பாட்னா: ‘ஆர்எஸ்எஸ் காபியை போன்றது, அதன் மீது மிதக்கும் நுரைதான் பாஜ,’  என்று  பிரசாந்த் கிஷோர்  விமர்சித்துள்ளார். பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தின் துணை  தலைவராக இருந்தார். நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடினால்  அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர், காங்கிரசில் சேரும் முயற்சியும் பலன் அளிக்கவில்லை. தற்போது, பீகாரில் அவர் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். நேற்று அவர் அளித்த பேட்டியில், ‘‘மோடி என்ற பலமான சக்தியை  தடுத்து நிறுத்த ஒன்றுபட்ட எதிர்க்கட்சிகள் கூட்டணி பலன் அளிக்குமா? என்று கூற முடியாது.  

ஆனால், பாஜவை பற்றி நன்கு அறியாமல் அந்த கட்சியை தேர்தலில் வீழ்த்துவது எளிதல்ல. ஒரு கப்பில் உள்ள காபியை பார்த்தால், அதன் மேல் பகுதியில் நுரை இருக்கும். அதுதான் பாஜ. கீழ் பகுதியில் உள்ள காபி ஆர்எஸ்எஸ். அது, ஆழமான கட்டமைப்பை கொண்டது. சமூகத்துக்குள் ஆழமாக ஊடுருவி உள்ள அதை குறுக்கு வழியில் வீழ்த்த முடியாது. காந்தியின் காங்கிரஸ் கொள்கைகளை புதுப்பிப்பதே, கோட்சே சித்தாந்தங்களின் வீழ்ச்சியாக அமையும். நிதிஷ், ஜெகன் மோகனின் வெற்றிக்கு பாடுபடுவதை விட்டு விட்டு, இந்த நோக்கத்தில் நான் செயல்பட்டிருந்தால் சிறப்பாக இருந்திருப்பேன்,’’ என்றார்.

Related Stories: