ஸ்ரீதேவி ஆசையை நிறைவேற்ற தயாராகும் ஜான்வி கபூர்

மும்பை: தயாரிப்பாளர் போனி கபூர், மறைந்த நடிகை ஸ்ரீதேவி தம்பதியின் மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகிய இருவரும் தற்போது பாலிவுட் படங்களில் ஹீரோயினாக நடித்து வருகின்றனர். திருமணத்துக்குப் பிறகு திரையுலகை விட்டு ஒதுங்கி இருந்த ஸ்ரீதேவி, கடந்த 2012ல் இந்தியில் வெளியான ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். இந்தியில் 14 ஆண்டுகளுக்குப் பிறகும், தமிழில் 26 வருடங்களுக்குப் பிறகும் ஸ்ரீதேவி நடித்த படமான இதை கவுரி ஷிண்டே இயக்கினார். இவர், பாலிவுட் இயக்குனர் பால்கியின் மனைவி. தமிழிலும் டப்பிங் செய்யப்பட்ட இப்படத்தில், சிறப்பு வேடத்தில் அஜித் குமார் சம்பளம் வாங்காமல் நடித்திருந்தார். இதன் இந்திப் பதிப்பில் அமிதாப் பச்சன் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார்.

இப்படம் ரிலீசாகி 10 வருடங்களான நிலையில், இதுகுறித்து ஜான்வி கபூர் பேசியுள்ளார். அவர் கூறுகையில், ‘என் வாழ்க்கையில் ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தை என்றைக்குமே மறக்க முடியாது. காரணம், இந்த ஷூட்டிங்கில் என்னுடைய அம்மா ஸ்ரீதேவி அதிக மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். இதை அடிக்கடி நான் நேரில் பார்த்து வியந்தி ருக்கிறேன். இப்படத்தில் நானும் ஒரு காட்சியில் தோன்றி நடத்திருப்பேன். ஒருநாள் என் அம்மா, ‘கண்டிப்பாக நீ கவுரி ஷிண்டே ைடரக்‌ஷனில் நடிக்க வேண்டும்’ என்று சொன்னார். எனது அம்மாவின் ஆசையை நிறைவேற்றும் வகையில், விரைவில் கவுரி ஷிண்டே இயக்கத்தில் நடிப்பேன். இன்றளவும் எங்களின் பெரிய குடும்பத்தில் முக்கிய நபராக கவுரி ஷிண்டேவும் இருந்து வருகிறார்’ என்றார்.

Related Stories: