உக்ரைன் போர் பற்றி தகவலை அறிய லிஸ் டிரஸ் போனை ஹேக் செய்த ரஷ்யா

லண்டன்: இங்கிலாந்து முன்னாள் பிரதமரான லிஸ் டிரஸ், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சராக இருந்த போது அவரது போன் ஹேக் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இந்த விவகாரத்தை அப்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சன், அரசு உயரதிகாரிகள் மூடி மறைத்து விட்டனர். ரஷ்ய ஹேக்கர்கள் டிரஸ்சின் போனை ஹேக் செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதன்மூலம், உக்ரைன் போர் குறித்து வெளிநாட்டு அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை, கூட்டணி கட்சியுடன் ஆலோசித்தது, முன்னாள் நிதியமைச்சர் க்வாசி க்வார்டெங்குடன் பேசியது என முக்கியமான தகவல்களை அவர்கள் திருடி உள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடும்படி, பிரதமர் சுனக்கை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. டிரஸ்சின் போன் ஹேக் செய்யப்பட்ட விவகாரம் தற்போது வெளியாகி இருப்பது, இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: