ஐ.நா அலுவல் மொழியாக இந்தி: ஒன்றிய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: ஐ.நா சபையின் அலுவல் மொழியாக இந்தியை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஒன்றிய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறினார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பேசுகையில், ‘ஐக்கிய நாடுகள் சபையில் (ஐ.நா), அதிகாரப்பூர்வ மொழியாக  இந்தி மொழியை அங்கீகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்படும். ஐ.நா சட்டத்திட்டன்படி, இந்தி மொழியை அலுவல் மொழியாக கொண்டு வருவது சாதாரணமான விஷயமல்ல; அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சரியான திசையில் அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சிறிது காலம் ஆகலாம். தற்போது ஐ.நா-வின் சார்பு அமைப்பான யுனெஸ்கோவில் இந்தி பயன்படுத்தப்படுகிறது’ என்றார்.

ஐ.நா-வை பொருத்தமட்டில் ஆங்கிலம், ரஷ்யன், ஸ்பானிஷ், சீனம், அரபு மற்றும் பிரஞ்சு ஆகிய மொழிகள் ஐ.நா-வின் அதிகாரப்பூர்வ மொழிகளாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ெதாடர்ந்து ஒன்றிய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரன் பேசுகையில், ‘பிஜி நாட்டில் வரும் பிப்ரவரி 15 முதல் 17ம் தேதி வரை, அந்நாட்டு அரசுடன் இணைந்து 12வது உலக இந்தி மாநாடு நடத்தப்படும்’ என்று தெரிவித்தார்.

Related Stories: