குன்னூர் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் 76வது ஆண்டு காலாட்படை தினம் அனுசரிப்பு

குன்னூர் :  குன்னூர் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் 76வது ஆண்டு காலாட்படை தினம் கொண்டாடப்பட்டது.கடந்த 1947ம் ஆண்டு, அக்டோபர் 27ம் தேதி முதல் காலாட் படையினர் ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர் விமானப்படை தளத்தில் எதிரிகளுடன் போரிட்டு காஷ்மீர் பள்ளத்தாக்கை மீட்டனர். நமது காலாட் படையின் இந்த வீரச்செயலை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 27ம் தேதி இந்திய ராணுவத்தின் சார்பில், காலாட்படை தினம் கொண்டாடப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக காலாட் படைக்கு முக்கிய பயிற்சி அளிக்கப்பட்டு வரும் நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சார்பில், நேற்று காலாட் படை தினம் கொண்டாடப்பட்டது.  இதனையொட்டி, வெலிங்டன் போர் நினைவு சதுக்கத்தில், ராணுவ இசை முழங்க ராணுவ வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. தொடர்ந்து காலாட்படை தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் விரேந்ரா வாட்ஸ் மற்றும் எம்‌.ஆர்.சி காமண்டன்ட் யாதவ், முன்னாள் லெப்டினன்ட் ஜெனரல் தேவ் ராஜ் அன்பு ஆகியோர் போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து ராணுவ மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில், ராணுவ உயர் அதிகாரிகள், முன்னாள் ராணுவ உயர் அதிகாரிகள், ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் காண்பிக்கப்பட்டது.

அதில் ராக்கெட் லாஞ்சர், ஏகே 47 ரக துப்பாக்கிகள், லைட் மிஷின் கன், எவி மிஷன் கன் உள்ளிட்டவற்றை எவ்வாறு செயல்படும் என்பது குறித்து ராணுவத்தினர் விளக்கம் அளித்தனர். பள்ளி மாணவ மாணவிகள் அதனை அறிந்துக் கொண்டனர்.

Related Stories: