ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தவே நடவடிக்கை அபராதம் வசூல் செய்வது நோக்கமல்ல-எஸ்.பி ஹரி கிரன் பிரசாத் விளக்கம்

நாகர்கோவில் :  சாலை விதிமீறல் அபராதம் விதிப்பது விழிப்புணர்வு ஏற்படுத்தற்காகவே என எஸ்.பி ஹரி கிரன் பிரசாத் கூறினார். குமரியில் நேற்று முன்தினம் முதல் புதியதாக உயர்த்தப்பட்ட அபாரதம் விதிக்கப்பட்டு வருகிறது. நேற்று முதல் ஹெல்மெட்  அணியாதவர்களுக்கு  அபராதம் விதிப்பது துரிதப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று மாலை வடசேரி சந்திப்பில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த எஸ்.பி ஹரிகிரன் பிரசாத் முடிவு செய்தார்.

இதற்காக ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களின் வாகனங்களை போக்குவரத்து ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர் அருண் மற்றும் வடசேரி இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் தலைமையில் போலீசார் நான்கு சாலைகளிலும் நின்று மடக்கி பிடித்தனர். பின்னர் செல்பி பாய்ன்ட் முன்பு அவர்கள் நிறுத்தப்பட்டனர். மாலை 5.30 மணியளவில் அங்கு எஸ்பி ஹரிகிரன் பிரசாத் பிடிபட்டவர்களிடம் கூறியதாவது:

தற்போது போக்குவரத்து விதிமீறல் அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது.ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம் $ஆயிரம் ஆகும். மதுபோதையில் வாகனம் ஓட்டினால் $10 ஆயிரமும்,  செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால்  $ஆயிரமும்,  லைசென்ஸ் இல்லாவிட்டால் $5 ஆயிரமும், காப்பீடு இலலாவிட்டால் $2 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்.

18 வயதுக்கு உட்பட்டவர்கள் வாகனம் ஓட்டினால், அவர்கள் பெற்றோர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். $25 ஆயிரம் அபராதமாக விதிக்கப்படும். அபராதத் தொகையை ரொக்கமாக போலீசார் வசூலிக்க மாட்டார்கள். போன் பே, கூகுள் பே போன்ற ஆப்கள் , ஏடிஎம் அட்டைகள் மூலம் மட்டுமே போலீசாரிடம் செலுத்த முடியும். அபராதம் விதிப்பது, வசூல் நோக்கில் அல்ல.

சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு அனைவரிடமும் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் எனக்கூறினார். தொடர்ந்து போக்குவரத்து விழிப்புணர்வு குறித்த புத்தகங்களும், புதிய அபராதம் எவ்வளவு என்கிற பட்டியலும் வாகன ஓட்டிகளிடம் விநியோகிக்கப்பட்டது.

ஹெல்மெட் அணிந்தவர்களும் சிக்கினர்

ஹெல்மெட் இல்லாதவர்களை போலீஸ் பிடிப்பதாக சாலைகளில் நின்று சிலர் வாகன ஓட்டிகளை எச்சரிக்கை செய்தனர். உடனே, பலரும் வாகனத்தை திருப்பி வேறுவழியில் சென்றனர். இதனால், குறைந்த எண்ணிக்கையில் பைக்குகள் சிக்கின. விழிப்புணர்வு நிகழ்ச்சி அதிகம் பேருக்கு சென்றடைய வேண்டும் என்பதால், ஹெல்மெட் அணிந்து  வந்தவர்களிடமும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்க கேட்டனர். இதற்கு சம்மதம் தெரிவித்தவர்களும் செல்பி பாயின்டில் நின்றனர்.

* சிலர் தப்பமுயன்று முடியாமல் போலீசில் சிக்கினர்.

* இதுபோல் பைக்கில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் மதுபோதையில் வந்தனர். இதில் ஒருவர் வண்டியிலேயே போதையில் சரிய அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

Related Stories: