பன்னீர்செல்வம் மௌனமே ஜெயலலிதா மரணத்துக்கு காரணம்: அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி பேச்சு

கிருஷ்ணகிரி : மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த பொழுது அவரது சிகிச்சை தொடர்பான  முடிவுகளை எடுத்திருக்க வேண்டிய அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மௌனமாக இருந்து சசசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டதால் ஜெயலலிதா மரணமடைந்தார் என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். 51-ம் ஆண்டு அதிமுக தொடக்க விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் கிருஷ்ணகிரியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி ஜெயலலிதா மறைவு குறித்து நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை குழு அறிக்கையில் அவருக்கு வழங்கப்பட்ட 75 நாள் சிகிச்சை தொடர்பாக யாரெல்லாம் உத்தரவு பிறப்பித்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளதாக கூறியுள்ளார். ஜெயலலிதாவை தனது கட்டுப்பாட்டில் சசிகலா வைத்து கொண்டு இருந்துள்ளார் என்றும் பலநாடுகளில் இருந்து வருகை தந்த மருத்துவர்கள் ஜெயலலிதாவை பரிசோதித்ததில் அவர்க்கு இதய கோளாறு இருந்ததையும், அதற்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளதாக கூறினார்.

ஆனால், சசிகலா மறுத்துவிட்டார் என்றும் அதனை மருத்துவர்களும் ஏற்று கொண்டதாக கே.பி.முனுசாமி தெரிவித்தார். சசிகலாவுக்கு ஆதரவாக மௌனமாக பன்னீர்செல்வம் இருந்ததால் தர்மம் செத்து விடுகிறது, ஜெயலலிதாவும் இறந்து விடுகிறார் என்று கூறினார். சிகிச்சை அளிக்க வேண்டிய அப்போல்லோ மருத்துவமனை நிர்வாகம் சசிகலா கட்டுப்பாட்டிற்குள் சென்று விட்டதாக குறிப்பிட்ட அவர் ஜெயலலிதா குணமடைய வேண்டும் என்ற எண்ணம் சசிகலாவுக்கு இல்லை என்று கூறினார்.

Related Stories: