மீனவர்கள் கைதுக்கு வைகோ கண்டனம்

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து கடந்த 26ம் தேதி  555 விசைப்படகுகளில் மீன்துறை அனுமதி சீட்டு பெற்று சென்ற மீனவர்கள், கச்சத்தீவு பாரம்பரிய கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது நள்ளிரவு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தங்கச்சிமடம் நாலு பனையைச் சேர்ந்த மைக்கேல் ராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற தங்கச்சிமடத்தைச் சேர்ந்த கிளிண்டன் உள்பட 7 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்துள்ளனர். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதும், கைது செய்து இலங்கை சிறைகளில் அடைப்பதும், படகுகளை பறிமுதல் செய்வது வன்மையான கண்டனத்துக்கு உரியது. ஒன்றிய அரசு கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: