சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தலைமையகம் திறப்பு விழா: ஒன்றிய அமைச்சரும், முதலமைச்சரும் இணைந்து திறந்து வைத்தனர்

சென்னை: சென்னை நந்தனத்தில் புதியதாக கட்டப்பட்டிருக்கும் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையக கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ஆகியவர்கள் திறந்து வைத்தனர். சென்னை நந்தனத்தில் ரூ.365 கோடியில் 12 மாடிகள் கட்டப்பட்டுள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் புதிய பிரம்மாண்ட தலைமை அலுவலகத்தை திறந்து வைக்கப்பட்டது.

குறிப்பாக சென்னை மெட்ரோ ரயில் பொறுத்தவரை சென்னையில் இருந்து இரண்டு வழித்தடங்கள் மெட்ரோ ரயில் பயணம் நடைபெற்று வருகிறது. 55 கிலோமீட்டர் தூரத்திற்கு தினசரி இந்த ரயில் பயணம் நடைபெற்று வரக்கூடிய சூழலில் 42 மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சராசரியாக சென்னை நகரில் இருந்து இரண்டு லட்சம் பேர் தினசரி இந்த ரயிலில் பயணம் செய்வதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் தற்போது கோயம்பேட்டில் மெட்ரோ ரயிலின் தலைமையகம் இயங்கி வருகிறது.

இங்குள்ள நிர்வாக கட்டிடம் ஒட்டு மொத்தமாக கோயம்பேட்டில் இயங்கி வரக்கூடிய அலுவலகத்தில் போதிய இடவசதி இல்லாத காரணத்தால் புதிதாக கட்டிடம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தான் நந்தனத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு அந்த கட்டிடம் கட்டும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இப்பொது சுமார் 3.90 லட்சம் சதுர அடியில் இருந்து ரூ.365 கோடியில் 12 மாடிகள் கொண்ட பிரமாண்ட கட்டிடமாக இந்த கட்டிடம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

இது தவிர 6 மாடி கட்டிடங்கள் மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கும் மற்றும் 6 மாடிகள் குடியிருப்புகள் தனியார் மருத்துவ நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடப்படும் என கூறியுள்ளனர். பிரம்மாண்ட கட்டிடம் முன்பு சுரங்கம் தோண்டும் எந்திரம் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் நுழைவு வாயிலில் பழங்கால கிணறு தத்ரூபமாக அமைக்கப்பட்டு பெண்கள் நீர் இறைத்து குடங்களில் எடுத்து செல்வது போன்றவை இப்பகுதியில் உள்ள பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது.

Related Stories: