தென்காசியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆபீசில் போலீஸ் திடீர் சோதனை

தென்காசி: தென்காசி மாவட்டம் புளியங்குடி பெரிய பள்ளிவாசல் அருகில் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சி அலுவலகம் செயல்பட்டு வந்தது. கடந்த ஓராண்டாக அலுவலகம் மூடப்பட்டுள்ள நிலையில் தற்போது கட்டிடத்தின் உரிமையாளர் முகம்மது உசேன் என்பவர் அலுவலகம் செயல்பட்ட கட்டிடத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

இதனிடையே தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் புளியங்குடியில் பிஎப்ஐ கட்சி அலுவலகம் செயல்பட்டு வந்த கட்டிடத்தில் இன்று காலை போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். புளியங்குடி டிஎஸ்பி அசோக், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், தென்காசி ஆர்டிஓ கெங்காதேவி, கடையநல்லூர் தாசில்தார் சண்முகம் ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார், பிஎப்ஐ. அலுவலகம் செயல்பட்டு வந்த கட்டிடத்தில் சோதனை மேற்கொண்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்திற்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.

Related Stories: