உலகளவில் தடுப்பூசி தயாரிப்பு இந்தியாவுக்கு முக்கிய பங்கு: அமெரிக்கா பாராட்டு

வாஷிங்டன்: உலக அளவில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை குறைப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் தடுப்பூசி மட்டுமே தீர்வாகும் என நிபுணர்கள் பரிந்துரைத்தனர். இதன் காரணமாக பல்வேறு நாடுகள் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி உற்பத்தி செய்யத்தொடங்கின. இந்தியாவிலும் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டது. தடுப்பூசி உற்பத்தி அதிகரிப்பது உலக அளவில் பெரும் சாவாலாக இருந் த நிலையில் இந்தியா வெளிநாடுகளுக்கும் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்து கவனம் பெற்றது.

இந்நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் கொரோனா வைரஸ் தடுப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் ஆஷிஷ் ஜா நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘இந்தியா தனது மிகச்சிறப்பான  உற்பத்தி திறன் காரணமாக தடுப்பூசிகளின் முக்கிய ஏற்றுமதியாளராக உள்ளது. உலக நாடுகளுக்கு தடுப்பூசிகளை தயாரிப்பதில் இந்தியா முக்கியமான நாடாகும். இது இந்தியாவிற்காக கூறவில்லை. இது மிகவும் முக்கியமான விஷயமாகும். குறைந்த மற்றும் நடுத்த வருமானம் கொண்ட நாடுகளுக்கும் அமெரிக்கா தொடர்ந்து இலவச தடுப்பூசிகளை கிடைக்க செய்யும்’ என்றார்.

Related Stories: