பொள்ளாச்சி மாட்டு சந்தையில் ஒரேநாளில் ரூ.1.80 கோடிக்கு வர்த்தகம்-வியாபாரிகள் மகிழ்ச்சி

பொள்ளாச்சி :  பொள்ளாச்சி மாட்டு சந்தையில் நேற்று ஒரேநாளில் மட்டும் ரூ.1.80 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் உள்ள மாட்டு சந்தைக்கு, புரட்டாசி மாதத்தில் மாடுகள் வரத்து குறைவாக இருந்ததுடன், விற்பனை மந்தமானது. பின்னர் கடந்த வாரம் நடந்து சந்தையின்போது, மாடுகள் வரத்து அதிகமாக இருந்ததுடன், கேரள மாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வருகையால், மாடு விற்பனை விறுவிறுப்பாகி கூடுதல் விலைக்கு போனது.

நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் காரணமாக நேற்று மாட்டு சந்தைக்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து ஓரளவு மாடுகள் வரத்து இருந்தாலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாடுகள் வரத்து வெகுவாக குறைந்தது. இதனால் கடந்த வாரத்தை போல்,  பெரும்பாலான மாடுகளுக்கு கூடுதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையானது.

இதில், பசுமாடு ரூ.35 ஆயிரத்துக்கும், காளை மாடு ரூ.35 ஆயிரத்துக்கும், எருமை மாடு ரூ.35 ஆயிரத்துக்கும், கன்றுக்குட்டி ரூ.15 ஆயிரத்துக்கும் விற்பனையானது. நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் ரூ.1.80 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக பொள்ளாச்சி மாட்டு சந்தை வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Related Stories: