வீட்டின் முன் கடை விரித்ததற்காக தீபாவளி கடைகளை நொறுக்கிய பெண் டாக்டர் மீது வழக்கு

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் லக்னோவின் கோமதி நகர் பகுதியில், தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. சாலையோரம் அமர்ந்து சிறு வியாபாரிகள் வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். அப்போது பட்ரகர்புரத்தை சேர்ந்த டாக்டர் அஞ்சு என்ற பெண், திடீரென தனது வீட்டில் இருந்து கையில் தடியுடன் வெளியே வந்து, அங்கிருந்த கடைகளை அடித்து நொறுக்கினார். தனது வீட்டின் முன் கடை விரித்ததற்காக தாக்கியதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட கடைக்காரரின் புகாரின் பேரில் அஞ்சு மீது கோமதிநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறு வியாபாரிகள் ​சாலையோரங்களில் கடை போட்டிருந்தனர். தனது வீட்டின் முன் கடைகள் இருப்பதாக கூறி, அந்த கடையின் பொருட்களை அஞ்சு சேதப்படுத்தினார். அதனால் அவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. சிறு வியாபாரிகள் திடீர் தர்ணாவில் ஈடுபட்டதால், அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தோம்’ என்றனர்.

Related Stories: