உ.பி.யில் ரத்தத்தில் உள்ள பிளாட்டிட்டுக்கு பதில் சாத்துக்குடி சாறு செலுத்தப்பட்ட நோயாளி உயிரிழந்ததால் அதிர்ச்சி..!!

லக்னோ: உ.பி.யில் ரத்தத்தில் உள்ள பிளாட்டிட்டுக்கு பதில் சாத்துக்குடி சாறு செலுத்தப்பட்ட நோயாளி உயிரிழந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. பிரயாக்ராஜைச் சேர்ந்த மணல் வியாபாரி பிரதீப் பாண்டே (32) என்பவர் டெங்கு காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிரதீப் பாண்டேவுக்கு பிளாட்டிலெட்ஸ் குறைந்ததால் ரத்தம் செலுத்த வேண்டும் என்று மருத்துவமனை கூறியுள்ளது. பிரதீப் பாண்டேவுக்கு முதலில் 3 யூனிட் பிளாட்டிலெட் செலுத்தி சிகிச்சை அளித்தபோது பிரச்சனை ஏற்படவில்லை. மேலும் சில யூனிட் பிளாட்டிலெட் செலுத்த வேண்டும் என்று தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் கூறினர்.

இதனால் மருத்துவமனை செயல்படும் கட்டட உரிமையாளர் மகன் மூலம் பிரதீப் உறவினர்கள், 5 யூனிட் பிளாட்டிலெட் ஏற்பாடு செய்துள்ளனர். இரண்டாவதாக வாங்கிக் கொடுத்த பிளாட்டிலெட்டுகளை செலுத்திய பிறகு பிரதீப் உடல்நிலை மோசமானதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நோயாளி பிரதீப், உடல்நிலை மிகவும் மோசமடைந்து உயிரிழந்துள்ளார். இதனிடையே மருத்துவமனை கட்டட உரிமையாளர் மகன் வாங்கிக் கொடுத்தது பிளாட்டிலெட்டே அல்ல, சாத்துக்குடி பழச்சாறு என்று உறவினர்கள் புகார் தெரிவித்திருக்கின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

Related Stories: