6 வயது சிறுமிக்கு கால் முறிவு பள்ளி நிர்வாகம்தான் பொறுப்பு: விஜயகாந்த் அறிக்கை

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: அம்பத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 6 வயது சிறுமி தவறி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதற்கு அப்பள்ளி நிர்வாகமே முழு பொறுப்பேற்க வேண்டும். பள்ளியில் மாணவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. ஒன்றும் தெரியாத சிறு குழந்தைகளுக்கு இதுபோன்ற ஒரு நிலை ஏற்படுவது வேதனை அளிக்கிறது. லட்சக்கணக்கில் கட்டணம் கேட்கும் கல்வி நிறுவனங்கள் ஏன் குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்போ, உரிய வசதியோ ஏற்படுத்தி கொடுப்பதில்லை. பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு தேமுதிக சார்பில் ஆறுதல் தெரிவிக்கிறோம். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: