நீர்வரத்து அதிகரிப்பால் மயிலாடி ஏரிக்கரை உடைந்தது-விவசாய நிலங்கள் நாசம்; சாலை துண்டிப்பு

இடைப்பாடி : அசிராமணி பேரூராட்சி, மட்டம் பெருமாள் கோயில் மயிலாடி ஏரி நள்ளிரவு கரை உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி 50 ஏக்கர் விவசாய நிலங்கள் சேதமானது. இதில் சாலை துண்டிக்கபட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.சேலம் மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் ஏற்காடு, ஓமலூர், தாரமங்கலம், சின்னப்பம்பட்டி, வெள்ளாளபுரம், சமுத்திரம், வேம்பனேரி, தாதாபுரம், ஆவணியூர், இடைப்பாடி, நைனாம்பட்டி, பெரிய ஏரி, சின்னேரி, மற்றும் அரசிராமணி பேரூராட்சியில் உள்ள மட்டம் பெருமாள் கோயில் அருகே மயிலாடி ஏரி, குள்ளம்பட்டி செட்டி பெட்டி, மைலம்பட்டி, தேவூர், அண்ணமார் கோயில் பகுதியில்  காவிரி ஆற்றில் மழை நீர் கலக்கிறது.

இதில் அரசிராமணி பேரூராட்சியில் மட்டம் பெருமாள் கோயில் மயிலாடி ஏரி நேற்று அதிகாலையில் அதிக மழைநீர் வந்ததால், அதன் கரை தடுப்பு உடைந்தது. இதனால் அருகில் உள்ள 50க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் பயிரிட்டிருந்த நெற்பயிர், பருத்திச் உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கின. மேலும் கிணறுகளில் உள்ள பம்பு செட்டுகள், மோட்டர்கள் அடித்து செல்லப்பட்டது. இப்பகுதியில் உள்ள அரசிராமணி பேரூராட்சியில் இருந்து மோலானி கோயிலுக்கு செல்லும் கரை சாலை உடைந்ததால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

இதேபோல், செட்டிப்பட்டி மற்றும் தைலான் காடு செல்லு சாலை பாலமும், கன மழையால் அரிப்பு ஏற்பட்டு உடைந்தது. இதனால் இவ் சாலையும் தடை செய்யப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து சேலம் மாவட்ட பேரூராட்சி துணை மண்டல இயக்குனர் கணேஷ் ராம், பேரூராட்சி உதவி பொறியாளர் சுப்பிரமணி, அரசிராமணி பேரூராட்சி தலைவர் காவேரி, துணைத் தலைவர் கருணாநிதி, செயல் அலுவலர் பழனிமுத்து, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் விஜயராகவன், ஆர்ஐ சத்யராஜ் மற்றும் கவுன்சிலர்கள் செல்வி செந்தில்குமார், ராஜா, செல்வி தங்கவேல், மாரியப்பன், ஜம்பு சின்னதுரை ஆகியோர் நேற்று காலை பார்வையிட்டனர்.

Related Stories: