இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானம் பாஜ எம்எல்ஏவை தமிழில் பேச சொன்ன சபாநாயகர்: சிரிப்பலையில் மூழ்கிய பேரவை

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் நேற்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான குழுவின் இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். இந்த தீர்மானத்தின் மீது சட்டமன்ற கட்சி தலைவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர். அப்போது பாஜ சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனை பேச சபாநாயகர் அப்பாவு அழைத்தார். அப்போது சபாநாயகரும் நயினார் நாகேந்திரனும் ஒருவரையாருவர் பார்த்து சிரித்தனர். இதையடுத்து இருக்கையில் இருந்து எழுந்து நயினார் நாகேந்திரன், ‘மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே..’ எனக் கூறிவிட்டு சில வினாடிகள் பேசாமல் நின்றார். இதை பார்த்த சபாநாயகர் அப்பாவு, நயினார் நாகேந்திரனை பார்த்து, ‘‘தமிழ், தமிழிலேயே பேசுங்கள்’’ எனக் கூறினார். அதற்கு அவர், ‘‘தமிழில் தான் பேச போறேன்’’ என்றார். இதை கேட்டு உறுப்பினர்கள் சிரித்தனர். இதனால் சட்டசபை சில வினாடிகள் சிரிப்பலையில் மூழ்கியது.

Related Stories: