சுற்றுலா தலமான ஏலகிரி மலையில் நிலாவூர், மங்களம் ஏரிகளை தூர் வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்: கிராம பொதுமக்கள் கோரிக்கை

ஏலகிரி:  சுற்றுலா தலமான ஏலகிரி மலையில் நிலாவூர் ஏரி, மங்கலம் ஏரி தூர்வாரப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை 14 கிராமங்களை உள்ளடக்கி தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. ஏலகிரி மலையில் நிலாவூர், மங்கலம் போன்ற பகுதிகளில் ஏரிகள் அமைந்துள்ளன. இது மக்கள் பயன்பாட்டில் இல்லாமல் ஏரிகள் பயனற்ற நிலையில் காணப்படுகிறது. இந்த ஏரிகளில் உள்ள தண்ணீர் பாசைகள் நிறைந்தும், செடிகள் வளர்ந்தும் கருப்பு நிறத்தில் தண்ணீர் காணப்படுகிறது.

இவ்வேரிகள் பயன்பாட்டில் இல்லாததால் மக்கள் இதனை பயன்படுத்துவதில்லை. இதற்கு முன் முன்னோர்கள்   மழை நீரை சேகரித்து, கோடை காலங்களில் கிராமத்திற்கும், கால்நடைகளுக்கும், வன உயிரினங்களுக்கும், தண்ணீரை பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது பயன்படுத்தாமல் ஏரியில் செடிகள் வளர்ந்து, தண்ணீர் கருப்பு நிறத்திலும் காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து ஏரியை தூர்வாரி சுத்தம் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: