யுவர் பிளாட்ஃபார்ம் குழுவினருக்கு முதல்வர் வாழ்த்து.!

சென்னை: தமிழ் நாட்டில் இருந்து, ‘உங்கள் பிளாட்ஃபார்ம்’(Your Platform)  என்ற முதல் ரயில் ஸ்மார்ட் இதழை தென்னக ரயில்வே உடன் இணைந்து வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியதற்காக, சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனத்துக்கு மாண்புமிகு தமிழ் நாடு முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

சென்னையைச் சேர்ந்த வி.பிரவீன்குமார், ஷங்கர் எம்.ஷிவ், கார்த்திக்.பி.எஸ் ஆகிய இளம் தொழில்முனைவோர் குழுவின் தனித்துவமிக்க முயற்சி இது. தமிழ்நாட்டுக்கு இது ஒரு பெருமையான தருணம். ஏனென்றால், மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு ஸ்டார்ட்-அப் இதுவரை யாரும் செய்யாத ஒரு புதிய முயற்சியை தமிழ் நாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது. மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘உங்கள் பிளாட்ஃபார்ம்’(Your Platform)   ஸ்மார்ட் இதழின் முதல் வெளியீட்டு நகலை பெற்றுக்கொண்டு குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Related Stories: