மக்களிடம் ஜனாதிபதி குவிஸ் போட்டி உங்க முதல்வர் யார்? சொல்லுங்க பார்ப்போம்... திரிபுராவில் பரபரப்பு

பமுடியா: திரிபுராவில் தேசிய சட்ட பல்கலைக் கழகத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று திறந்து வைத்தார். ஜனாதிபதி திரவுபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக நேற்று திரிபுரா சென்றார். அங்குள்ள நரசிங்காரில் தேசிய அமைக்கப்பட்டுள்ள தேசிய சட்ட பல்கலைக் கழகத்தை அவர் திறந்து வைத்தார். தொடர்ந்து, மோகன்பூர் உட்பிரிவில் உள்ள துர்காபரி தேயிலை தோட்டத்திற்கு சென்றார். அங்குள்ள தொழிலாளர்களுடன் அவர் கலந்துரையாடினார்.

அப்போது, பெண் ஊழியர் ஒருவரிடம், ‘உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறீர்களா? உங்கள் குழந்தைகளை தவறாமல் பள்ளிக்கு அனுப்பி வையுங்கள். அரசின் இலவச அரிசி மற்றும் பிற திட்டங்களின் பலன்கள் உங்களுக்கு கிடைக்கிறதா?’ என கேட்டறிந்தார்.  மேலும், ஜனாதிபதி தோட்ட தொழிலாளர்களிடம், ‘என்னுடன் இருப்பவர்களில் முதல்வர் சாஹா, உள்ளூர் எம்எல்ஏ கிரிஷ்நாதன் தாஸ் ஆகியோர் யார் என அடையாளம் காட்ட முடியுமா?’ என்றார். அதற்கு அவர்கள் சரியான பதில் அளித்தனர். தொடர்ந்து, இருவரும் உள்ளூரை சேர்ந்தவர்கள்தான். ‘உங்களுக்கு ஏதாவது தேவை அல்லது பிரச்னை என்றால் அவர்களை அணுகுங்கள்,’ என்று அறிவுறுத்தினார்.

Related Stories: