இந்தி மொழி திணிப்பின் மூலம் ஒன்றிய அரசு தாய்மொழி உரிமையை அழிக்கிறது: முத்தரசன் கண்டனம்

சென்னை: இந்தி மொழி திணிப்பின் மூலம் மாநில மக்களின் தாய்மொழி உரிமையை அழிக்க நினைக்கிறது ஒன்றிய அரசு என முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அரசியல் சாசனத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் அனைத்தும் ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக ஏற்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மாநில மக்களால் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அதனை நிராகரித்து ‘இந்தி மொழியை திணிக்க முயற்சிப்பதை கைவிட வேண்டும்.இந்தி மொழித் திணிப்பின் மூலம் மாநில மக்களின் ‘தாய் மொழி’ உரிமையை அழிக்க நினைக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதுடன், அரசியல் அமைப்புச் சட்டம் அங்கீகரித்துள்ள 22 மொழிகளையும் ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக ஏற்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

Related Stories: