மொழி திணிப்பால் சோவியத் யூனியன் வீழ்ந்த நிலைதான் ஏற்படும்: ஒன்றிய அரசுக்கு வைகோ எச்சரிக்கை

சென்னை: மொழி திணிப்பால், சோவியத் யூனியன் வீழ்ந்த நிலைதான் இந்தியாவிலும் ஏற்படும் என்று ஒன்றிய அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து மதிமுக பொது செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 22 மொழிகளுக்கும் சம வாய்ப்பு, சம உரிமை வழங்கி, நாட்டின் ஆட்சி மொழி மற்றும் அலுவல் மொழிகள் ஆக்கிட வேண்டும். அப்போதுதான் நாட்டின் ஒருமைப்பாடு நிலைக்கும். இல்லையெனில் மொழித் திணிப்பால் சோவியத் யூனியன் வீழ்ந்த நிலைதான் இந்தியாவிலும் ஏற்படும்.

Related Stories: