வருகிற 25ம் தேதி சூரியகிரகணம் ஏழுமலையான் கோயில் அரை நாள் மூடப்படும்: தேவஸ்தானம் தகவல்

திருமலை: அக்டோபர் 25ம் தேதி சூரிய கிரகணம், நவம்பர் 8ம் தேதி சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி எழுமலையான் கேயரில் 12 மணிநேரம் மூடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான சூரிய கிரகணம் வரும் 25ம் தேதியும், சந்திர கிரகணம் நவம்பர் 8ம் தேதியும் நடைபெற உளளது. இதனால், அன்றைய தினங்களில் ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் மூடப்பட உள்ளது. எனவே, விஐபி தரிசனம், ஸ்ரீவாணி, ரூ.300 சிறப்பு நுழைவு தரிசனம் மற்றும் கட்டண  சேவைகளுக்கான அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கட்டணமில்லா தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். அக்டோபர் 25ம் தேதி மாலை 5.11 மணி முதல் 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழும்.

இதனால், கோயிலின் கதவுகள் காலை 8.11 மணி முதல் இரவு 7.30 மணி வரை மூடப்படும். பிறகு, பக்தர்கள்  தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். அதேபோல், நவம்பர் 8ம் தேதி பிற்பகல் 2.39 மணி முதல் 6.27 மணி வரை சந்திர கிரகணம் நிகழவுள்ளது. அங்கு கோயில் கதவுகள் காலை 8.40 மணி முதல் இரவு 7.20 மணி வரை மூடப்பட்டிருக்கும். பிறகு, கட்டணமில்லா தரிசனத்தில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பொதுவாக, கிரகண நாட்களில் கிரகணம் முடியும் வரை சமைக்கப்படுவது இல்லை. எனவே, திருமலையில் உள்ள மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத பவன், தரிசனத்திற்கு செல்லும் வைகுண்டம் காம்பளக்சில் அன்னபிரசாதம் வழங்கப்படாது.

Related Stories: