உலக வங்கியின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா செல்கிறார் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 6 நாள் அரசு முறை பயணமாக இன்று அமெரிக்கா செல்கிறார். இந்த பயணத்தின் போது சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்திர கூட்டம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் பங்கேற்கவுள்ளார். மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா மற்றும் உலக வங்கி தலைவர் டேவிட் மல்பாஸ் ஆகியோரை இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனித்தனியே சந்தித்து பேசுகிறார்.

அதேபோல, அமெரிக்க நிதி அமைச்சர் ஜெனட் இலனையும் நிர்மலா சீதாராமன் சந்திக்கிறார். மேலும், ஜப்பான், தென் கொரியா, சவுதி அரேபியா, ஆஸ்திரேலியா, பூடான், நியூசிலாந்து, எகிப்து, ஜெர்மனி, மொரிஷியஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுடனான இருதரப்பு சந்திப்புகளிலும் நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார்.

Related Stories: