அனைத்து இடங்களிலும் மழைநீர் வடிந்தது; வருங்காலங்களில் எந்த மழை வந்தாலும் அதை சமாளிக்க அரசு தயாராக உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு சென்று ஆய்வு செய்தார். அங்குள்ள ரெட்டேரி ஏரியை தூர்வாரி குடிநீர் தேவைக்காக பயன்படுத்தும் வகையில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அந்த திட்டப்பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விரைவில் பணிகளை முடிக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து கொளத்தூர் தொகுதியில் உள்ள வீனஸ் நகர், ரெட்டேரி, பாலாஜி நகர், தணிகாசலம் உள்ளிட்ட பகுதிகளில் முதல்வர் ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அவர் கூறியதாவது; வெள்ள தடுப்பு பணிகள் மக்கள் பாராட்டும் வகையில் சிறப்பாக நடந்துள்ளது. மழை வெள்ளத்தை அரசியலாக்கி, வியாபார பொருளாக்க சிலர் முயற்சிக்கின்றனர். மக்கள் திமுக அரசை பாராட்டுவதை தாங்க முடியாமல் சிலர் விமர்சனம் செய்கின்றனர். அந்த விமர்சனங்களுக்கு பதில் சொல்ல நான் விரும்பவில்லை. சென்னையில் கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் மழைநீர் வடிந்துவிட்டது. வருங்காலங்களில் எந்த மழை வந்தாலும் அதை சமாளிக்க அரசு தயாராக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post அனைத்து இடங்களிலும் மழைநீர் வடிந்தது; வருங்காலங்களில் எந்த மழை வந்தாலும் அதை சமாளிக்க அரசு தயாராக உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: