இருங்காட்டுகோட்டையில் உள்ள கார் தொழிற்சாலையை ரூ.1500 கோடி முதலீட்டில் நவீனமயமாக்க ஹூண்டாய் நிறுவனம் முடிவு

சென்னை: தமிழகத்தை பொறுத்த வரையில் அதிக அளவில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் மாநிலமாக உள்ளது. இந்த நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அதற்கு முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தானது.

இந்த நிலையில் சென்னை இருங்காட்டுகோட்டையில் உள்ள கார் தொழிற்சாலையை ரூ.1500 கோடி முதலீட்டில் நவீனமயமாக்க ஹூண்டாய் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஹூண்டாய் நிறுவனமானது 2023, 2026-ல் தமிழ்நாடு அரசுடன் ஒருசில புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டது. அதில் ரூ.26 ஆயிரம் கோடி அளவிற்கு தமிழ்நாட்டில் கூடுதலாக முதலீடி செய்வது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டது.

அந்த ஒப்பந்தத்தின் படி முதல் கட்டமாக ரூ.1,500 கோடி முதலீடு செய்வதற்கான நடவடிக்கையை ஹூண்டாய் நிறுவனம் தொடங்கியுள்ளது. அதன்படி இருங்காட்டுகோட்டையில் தற்போது 5.40 லட்சம் சதுர அடியில் செயல்பட்டு வரும் ஹூண்டாய் நிறுவனம், கூடுதலாக 1.81 லட்சம் சதுர அடியில் தொழிற்சாலையை நவீனமயமாக்க முடிவு செய்துள்ளது. அதற்காக சுற்றுசூழல் அனுமதிகோரி தமிழ்நாடு சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பத்தை சமர்பித்துள்ளது. தமிழ்நாடு சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்த உடன் நவீனமயமாக்கும் பணியானது தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post இருங்காட்டுகோட்டையில் உள்ள கார் தொழிற்சாலையை ரூ.1500 கோடி முதலீட்டில் நவீனமயமாக்க ஹூண்டாய் நிறுவனம் முடிவு appeared first on Dinakaran.

Related Stories: