கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தை

கோத்தகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக பகல் மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்பு, சாலைகள், தேயிலை தோட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீர் தேடி கரடி, காட்டு மாடு, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் உலா வருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக தேயிலை தோட்டத்தில் சிறுத்தை உலா வருவதை பார்த்து பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் குடியிருப்பு அருகே உலா சிறுத்தை உணவு தேடி திரிந்துள்ளது. அது அங்கு உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ வெளியாகிள்ளதால் அப்பகுதி மக்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர். ஈளாடா பகுதியில் உலா வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: