சிவகாசி சிவன் கோயில் முன்பு நோ பார்க்கிங்கில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்

சிவகாசி: சிவகாசி சிவன் கோயில் முன்பு நோ பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்துவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சிவகாசியில் பிரசித்தி பெற்ற சிவன் கோயில் உள்ளது. நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். கோயில் பிரகாரத்தில் துர்க்கை அமம்ன், தட்சிணா மூர்த்தி, முருகன், பைரவர், நவகிரகங்கள் தெய்வங்களும் அறநிலைய துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் தமிழக அரசின் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு தினமும் 100 பக்தர்களுக்கு மதியம் 12 மணிக்கு இலவச அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் சிவன் கோயில் முன்பு வாகனங்களை நிறுத்தவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனை தடுக்க கோயிலின் முன்பு நோ பார்க்கிங் போர்டு வைத்து வாகனங்களை நிறுத்த போலீசார் தடை விதித்திருந்தனர். எனினும் தற்போது நோ பார்க்கிங் பகுதியில் வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்படுகினற்ன. இதனால் பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்ல சிரமப்படுகின்றனர். மேலும் கோயிலின் முன்பு தற்காலிக பழ கடைகள், பூக்கடை, நடைபாதை வியாபாரிகள் என பல்வேறு தரப்பினர் இடத்தை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் பகல் நேரங்களில் இப்பகுதியில் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகனஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

இதேபோல் சிவகாசி மாநகராட்சி பகுதியில் பஸ்நிலைய சாலை, என்ஆர்கே தெரு இருபுறமும் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லவே சிரமப்படுகின்றனர்.

இதற்கு சிவகாசி நகரில் உள்ள வணிக நிறுவனங்கள், பல்பொருள் அங்காடி, ஜவுளி கடைகள் மற்றும் ஒரு சில தங்கும் விடுதிகளில் பார்க்கிங் வசதி இல்லாததே காரணம். எனவே போலீசார் சிவகாசி சிவன் கோயில், பஸ்நிலைய சாலை, என்ஆர்கே தெரு பகுதிகளில் நோ பார்க்கிங் பகுதியில் வாகனங்களை நிறுத்த தடை விதிப்பதுடன், தொடர்ந்து கண்காணிக்கவும் வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: