எல்லையில் ஐரோப்பிய கண்காணிப்பு குழு அர்மீனியா, அஜர்பைஜான் நடத்திய பேச்சில் ஒப்பந்தம்

ப்ராக்: ஒருங்கிணைந்த சோவியத் யூனியன் நாடுகளாக இருந்த அர்மீனியாவும், அஜர்பைஜானும், 1991ம் ஆண்டு சோவியத் யூனியன் சிதறிய போது தனித்தனி நாடுகளாக உருவாகின. இந்த இருநாடுகளும் நாகோர்னோ - காராபாக் மலை பகுதிக்கு சொந்தம் கொண்டாடி, 20 ஆண்டுகளாக சண்டையில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த மாதம் நடந்த போரில் இருதரப்பிலும் 155 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், இரு நாடுகளின் தலைவர்களும் ப்ராக் நகரில் போரை நிறுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றிய தலைவர் சார்லஸ் மிஷெல், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் முன்னிலையில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், அவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், அஜர்பைஜான் எல்லையில் ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு குழுவை நியமிக்க அர்மீனியா ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Related Stories: