பும்ராவுக்கு மாற்று ஷமி தான்

உலக கோப்பை டி.20 தொடர் வரும் 16ம் தேதி தொடங்க உள்ள நிலையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா காயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு பதிலாக மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் பும்ராவுக்கு பதிலாக முகமது ஷமி தான் பொறுத்தமாக இருப்பார் என தென்ஆப்ரிக்கா முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், பும்ரா இல்லாததை எதிரணியினர் கேள்விப்பட்டவுடன் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள். அவர் ஒரு அற்புதமான பந்து வீச்சாளர். அவருக்கு மாற்றாக, அதேபோன்ற அனுபவத்துடன் தகுதி பெறக்கூடிய ஒருவராக ஷமியை நான் பார்க்கிறேன். அவர் உலகம் முழுவதும் விளையாடி உள்ளார். பந்தை ஸ்விங் செய்ய முடியும் மற்றும் வேகமாகவும் வீசமுடியும், என தெரிவித்துள்ளார்.

Related Stories: