மாவிளை பகுதியில் தோப்பில் ராஜநாகம் சிக்கியது

கருங்கல்: கருங்கல் அருகே கொல்லஞ்சி, மாவிளை பகுதியில் ஒரு வீட்டின் அருகாமையில் தோட்டம் உள்ளது. இதில் ஆடு,  மாடு, கோழி, நாய் போன்றவை வெளியே செல்லாமல் இருக்க தோட்டத்தை சுற்றி  வலையால் ஆன வேலி போடப்பட்டுள்ளது. சம்பவத்தன்று அந்த வலையில் சுமார் 6 அடி  நீளமுள்ள ராஜ நாகம் ஒன்று வலையில் சிக்கி கிடந்தது. இதனைப் பார்த்த  அப்பகுதி மக்கள் கொல்லஞ்சி பஞ்சாயத்து தலைவர் சலோமிக்கு தகவல் கொடுத்தனர்.  

அங்கு வந்த பார்வையிட்ட அவர், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.  இதனையடுத்து வனத்துறையினர் விரைந்து வந்து வலையில் சிக்கியிருந்த  ராஜ நாகத்தை பிடித்து சாக்கில் போட்டு எடுத்துச் சென்றனர். இச்சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: