மும்பை ஐஐடி மாணவர்கள் உருவாக்கிய 80 மாடி வரை பறந்து சென்று தீயை அணைக்கும் டிரோன்கள்: விரைவில் தீயணைப்புத்துறையில் சேர்ப்பு

மும்பை: ஐஐடி மாணவர்கள் உருவாக்கிய 80 மாடி வரை பறந்து சென்று தீயை அணைக்கும் டிரோன்களை தீயணைப்புத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். மும்பையில் அடிக்கடி அடுக்குமாடி குடியிருப்புகளில் தீ விபத்து ஏற்படுகிறது. தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத நெருக்கடி மிகுந்த இடங்களில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் (டிரோன்கள்) மூலம் தீயை அணைப்பதற்கான சோதனையில் ஈடுபட வேண்டும் என்று மும்பை ஐஐடி விண்வெளித்துறையை மும்பை தீயணைப்புத்துறை கேட்டுக்கொண்டிருந்ததாக தீயணைப்புத்துறை தலைமை அதிகாரி ஹேமந்த் பரப் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது: மும்பை ஐஐடி விண்வெளித்துறையினருடன் 2 ஆண்டுக்கு முன் நடத்தப்பட்ட ஆலோசனையில் 250 முதல் 300 மீட்டர் உயரத்துக்கு பறக்கும் டிரோன்கள் தேவை என தெரிவித்திருந்தோம். அதன் மூலம் 80வது மாடியில் பற்றி எரியும் தீயை படம் பிடிப்பதுடன் நிமிடத்துக்கு 300 லிட்டர் தண்ணீரை எடுத்து சென்று பீய்ச்சி அடித்து அணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த டிரோன் 2 மணிநேரம் பறக்கும் வகையில் உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தோம்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் மும்பை ஐஐடி மாணவர்கள் 50 மீட்டர் உயரத்துக்கு பறக்கும் தன்மையுள்ள 100 கிலோ எடையுள்ள கேமராவுடன் கூடிய டிரோன்களை உருவாக்கியுள்ளனர். அவற்றை  மும்பை தீயணைப்புத்துறை அதிகாரிகள் பயன்படுத்த தகுதியானதா என ஆய்வு செய்துள்ளனர். இதனால் விரைவில் இந்த டிரோன்கள் தீயணைப்பு படையில் சேர்க்கப்படும் என தெரிகிறது.

Related Stories: