இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு செப்டம்பரில் 3,362 கோடி டாலராக குறைந்தது: ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு செப்டம்பரில் 3,362 கோடி டாலராக குறைந்து விட்டதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் இறக்குமதி மதிப்பும் 7 மாதங்களுக்கு பிறகு 6,000 கோடி டாலர்களுக்கு கீழ் சென்றுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்தது.

செப்டம்பரில் 5,935 கோடி டாலர் மதிப்புக்கு இந்தியா வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. ஏற்றுமதி குறைவாகவும், இறக்குமதி அதிகமாகவும் உள்ளதால் இந்தியாவின் வெளி வர்த்தக பற்றாக்குறை 19% உயர்ந்துள்ளது.

2021 செப்டம்பருடன் ஒப்பிட்டால் 2022 செப்டம்பரில் வெளி வர்த்தகப் பற்றாக்குறை 19% சரிந்து 2,673 கோடி டாலராக உள்ளது. எனினும், 2022 ஆகஸ்ட் மாத வெளி வர்த்தகப் பற்றாக்குறை 2,673 கோடியாக குறைந்துள்ளது.

Related Stories: