தமிழகம் முழுவதும் ஆபரேஷன் கஞ்சா வேட்டையில் கஞ்சா வியாபாரிகளின் 2,000 வங்கி கணக்குகள் முடக்கம்; காவல்துறை அதிரடி

சென்னை: தமிழகம் முழுவதும் ஆபரேஷன் கஞ்சா வேட்டையில் கஞ்சா வியாபாரிகளின் 2,000 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. 2,000 வங்கி கணக்குகளில் இருந்து சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான சொத்துக்கள், பணம் முடக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் ஆப்ரேஷன் கஞ்சா வேட்டையில் கஞ்சா வியாபாரிகளின் 2,000 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது. டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின்பேரில் ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0 சோதனை தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை என்ற பெயரில் சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் ஆப்ரேஷன் கஞ்சா வேட்டையில் கஞ்சா வியாபாரிகளின் 2,000 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது. 2,000 வங்கி கணக்குகளில் இருந்து சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான சொத்துக்கள், பணம் முடக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளன.

Related Stories: