மேல்மட்ட சாலை பணிகளுக்கு ரூ.5,600 கோடி ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது; அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை: பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் இன்று பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளின் நெடுஞ்சாலைத் துறையின் சார்பாக நடைபெற்று வரும் வெள்ள தடுப்பு, மழைநீர் வடிகால் கட்டுமான பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். வால் டாக்ஸ் சாலையில் மழை நீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அண்ணா பிள்ளை தெருவில் முடிக்கப்பட்டுள்ள குறுக்கு கால்வாய் பணிகளை பார்வையிட்டார். மேலும் வுட் வார்ப் முதல் தெருவில் அணுகு கால்வாய் அமையவுள்ள பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை பார்வையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய வழிமுறைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் பெத்து தெருவில் முடிக்கப்பட்ட அணுகு கால்வாய் பணியை ஆய்வு செய்து விளிம்பில் பொறுத்த பட்டுள்ள மதகினை பருவ மழைக்கு ஆயத்தமாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தியுள்ளார். மேலும் வால் டாக்ஸ் சாலையில் சென்ட்ரல் முதல் யானைக்கவுனி வரை இணைக்க படாமல் உள்ள மழை நீர் வடிகால் இணைப்புகளை துரிதமாக ஒரு வார காலத்திற்குள் முடிக்க உத்தரவிட்டார். பின்னர் உள் வட்ட சாலையில் கொளத்தூர் வீனஸ் நகர்பகுதியில் முடிக்கப்பட்டுள்ள வெள்ள நீர் வெளியேற்றும் மோட்டார் அறை பணிகளை ஆய்வுசெய்தார். டெம்பிள் பள்ளி பகுதியில் நடைபெற்று வரும் மோட்டார் அறை பணியை பருவ மழைக்கு முன்னர் முடிக்க அறிவுறுத்தினார்.

கொளத்தூர் பகுதியில் ரெட்டேரியில் 250 மீ நீளத்திற்கு  தணிகாச்சலம் கால்வாயுடன் இணைக்கும் வகையில் நடை பெற்று வரும்  பெரிய மழை நீர் வடிகால் பணியினை ஆய்வு செய்தார். இதில் 110 மீ நீளத்திற்கு பணிகள்முடிக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றவேண்டி பணிகள் தடையுற்று நின்றது. தற்பொழுது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மழைநீர் வடிகால் பனி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இவற்றை ஆய்வு செய்து மாண்புமிகு அமைச்சர் அவர்கள் 15.10.2022 குள் அனைத்துப் பணிகளையும் முடிக்க ஆணையிட்டார்.

மேலும் பெரிய வடக்கத்திய சாலை கணபதி நகர் பகுதியில் மற்றும் உள்வட்ட சாலை சதாசிவம் நகர் பகுதிகளில் அமைக்க படவேண்டியுள்ள குறுக்கு கால்வாய் பணிகளை துரிதப்படுத்தி 15.10.2022குள் முடிக்க அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது, மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள், தலைமை பொறியாளர் திரு.சந்திரசேகர், கண்காணிப்பு பொறியாளர் திரு.செந்தில், மற்றும் நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் உடனிருந்தனர்.

Related Stories: