சில்லி பாயின்ட்...

* மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடரில் வங்கதேச அணியுடன் நேற்று மோதிய பாகிஸ்தான் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச, வங்கதேசம் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 70 ரன் மட்டுமே எடுத்தது. அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 12.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 72 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

*  சீனாவின் செங்டு நகரில் நடக்கும் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் பிரிவில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கஜகஸ்தானை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது. மகளிர் பிரிவிலும் இந்தியா 3-1 என்ற கணக்கில் எகிப்து அணியை வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றது.

*  தென் ஆப்ரிக்க அணியுடன் இந்தூரில் இன்று நடக்க உள்ள 3வது மற்றும் கடைசி டி20 போட்டிக்கான இந்திய அணியில் விராத் கோஹ்லி, துணை கேப்டன் கே.எல்.ராகுலுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. கோஹ்லிக்கு பதிலாக ஷ்ரேயாஸ் அய்யருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம். ஷாபாஸ், சிராஜ், உமேஷ் ஆகியோரில் ஒருவர் சேர்க்கப்படும் வாய்ப்பும் உள்ளது. ராகுல் இல்லாத நிலையில் கேப்டன் ரோகித்துடன் பன்ட் அல்லது ஸ்கை இணைந்து இன்னிங்சை தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

*  பாகிஸ்தான் அணியுடன் நடந்த 7வது டி20 போட்டியில் 67 ரன் வித்தியாசத்தில்  வென்ற இங்கிலாந்து அணி 4-3 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இங்கிலாந்து 20 ஓவரில் 209/3 (மலான் 78*, டக்கெட் 30, புரூக் 46*). பாகிஸ்தான் 20 ஓவரில் 142/8 (ஷான் மசூத் 56, குஷ்தில் ஷா 27, இப்திகார் 19). மலான் ஆட்ட நாயகன் விருதும், புரூக் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

*  நவம்பர்-டிசம்பரில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டி அடிலெய்டில் நவ. 26ம் தேதியும், அதைத் தொடர்ந்து நவ. 27, 30, டிச. 3, 4 தேதிகளிலும் போட்டிகள் நடைபெற உள்ளன. ஒடிஷாவில் அடுத்த ஆண்டு ஜனவரியில் உலக கோப்பை ஹாக்கி தொடர் நடக்க உள்ள நிலையில், இரு அணிகளுக்குமே இந்த தொடர் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

Related Stories: