திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மர்மமான முறையில் உயிரிழக்கும் குரங்குகள்: பொதுமக்கள் வேதனை

திண்டிவனம்: திண்டிவனம்  ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் அவ்வப்போது மர்மமான முறையில்  குரங்குகள் உயிரிழந்து வருவதால் பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர். திண்டிவனம்,  செஞ்சி சாலையில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு  திண்டிவனம் மட்டுமின்றி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து அதிக அளவில்  விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் பயிரிடப்படும் பொருட்களை விற்பனை  செய்வது வழக்கம். இதனால் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில்  குரங்குகள் மற்றும் நாய் உள்ளிட்டவை அதிக அளவில் உள்ளது. இவைகள் அவ்வப்போது  மர்மமான முறையில் உயிரிழந்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.  

கடந்த சில நாட்களுக்கு முன்பு 4 நாய், 6 குரங்குகள் மர்மமான முறையில்  உயிரிழந்து கிடந்ததாகவும், அவற்றை மற்ற குரங்குகள் பார்த்து, கூச்சலிட்டு  அழுததாகவும் வேதனையுடன் தெரிவித்தனர். இதே போல் நேற்று ஒழுங்குமுறை விற்பனை  கூட வளாகத்தில் இரண்டு குரங்குகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது.

இது  குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில்  விவசாயிகள் பொதுமக்கள் வழங்கும் உணவு பொருட்களை  உண்டு நாய் மற்றும் குரங்குகள் அப்பகுதியிலேயே இருந்து வருகிறது. சமீப காலமாக நாய் மற்றும்  குரங்குகள் மர்மமான முறையில் உயிரிழந்து வருகிறது. உணவில் மர்ம நபர்கள்  விஷம் கலந்து வைத்து சாகடிக்கிறார்களா என சந்தேகமாக உள்ளது. ஆகையால்  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதியில் விசாரணை செய்து உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: