கோடநாடு பகுதி தேயிலை தோட்டங்களில் செந்நாய் கூட்டம் உலா-பொதுமக்கள் பீதி

ஊட்டி : கோத்தகிரி அருகே கோடநாடு பகுதியில் தேயிலை தோட்டங்களில் செந்நாய் கூட்டங்கள் அடிக்கடி உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி 55 சதவீதத்திற்கும் மேல் வனப்பரப்பு மிகுந்த மாவட்டமாக விளங்கி வருகிறது. இந்த வனங்களில் புலி, சிறுத்தை, காட்டுமாடு, யானை, கரடி, செந்நாய், பல வகை மான்கள், பறவைகள் உள்ளிட்டவைகள் வாழ்க்கின்றன. இதுதவிர விலை உயர்ந்த மரங்கள், அரிய வகை தாவரங்கள் உள்ளன.

வனம் ஆக்கிரமிப்பு, வனங்களுக்குள் செல்லும் நீரோடைகள் ஆக்கிரமிப்பு செய்வது வன விலங்குகள் சென்று வர கூடிய பாதைகளில் வேலிகள், மின்ேவலிகள் அமைப்பதால் வன விலங்குகள் உணவு, தண்ணீர் தேடி ஊருக்குள் உலா வர கூடிய சூழல் உருவாகியுள்ளது. மேலும்  நீலகிரியில் வன விலங்குகள் கணிசமாக அதிகரித்துள்ளன. ஆனால் அதற்கேற்ப வனப்பரப்பு இல்லாததால் வன விலங்குகள் ஊருக்குள் புக கூடிய சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் நீலகிரி வன கோட்டத்திற்கு உட்பட்ட கோத்தகிரி அருகேயுள்ள கோடநாடு பகுதியில் தேயிலை தோட்டங்கள், குடியிருப்பை ஒட்டியுள்ள பகுதிகளில் சமீபகாலமாக செந்நாய் கூட்டங்கள் நடமாட்டம் இருந்து வருகிறது. விசில் அடிப்பது போன்று சத்தம் எழுப்பிய படி அங்குமிங்குமாக ஓடி விளையாடுவதை அப்பகுதி பொதுமக்கள் பார்த்துள்ளனர்.

 வனத்துறையினர் கூறுகையில், கோடநாடு பகுதிக்கு கீழ்புறம் முதுமலை புலிகள் காப்பகத்தின் மாயார், கல்லம்பாளையம் உள்ளிட்ட அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இந்த வனம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வரை நீள்கிறது. இப்பகுதியில் இருந்து செந்நாய் கூட்டம் வந்திருக்கலாம். கூட்டமாக வாழும் இவை இரை விலங்கை துரத்தி சென்று களையப்படைய செய்து வேட்டையாடி உட்கொள்ளும். அதிக மோப்ப சக்தி கொண்டதுடன், பார்வைத்திறன், கேட்கும் திறனும் அதிகம். செந்நாய்கள் அழியும் பட்டியில் இடம்பெற்றுள்ளன. தற்போது அனைத்தும் பகுதிகளிலும் பரவலாக காணப்படுகின்றன, என்றனர்.

Related Stories: