அல்லு அர்ஜூன் ஸ்டுடியோவில் சிரஞ்சீவி

ஐதராபாத்: தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன், ‘புஷ்பா’ வெற்றிக்கு பிறகு பான் இந்தியா நடிகராக மாறி விட்டார். அவருடைய தந்தை அல்லு அரவிந்த், தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருக்கிறார். இந்நிலையில் அல்லு அர்ஜூன், 2004ல் காலமான தன்னுடைய தாத்தா நடிகர் அல்லு ராமலிங்கய்யாவை நினைவுபடுத்தும் வகையில், அவரது 100வது பிறந்த

நாளான நேற்று முன்தினம் ஸ்டுடியோ ஒன்றை தொடங்கியுள்ளார்.

ஐதராபாத் பகுதியில் ‘அல்லு ஸ்டுடியோஸ்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இதை திறந்து வைத்த சிரஞ்சீவி, ‘அல்லு ராமலிங்கய்யா இவர்கள் குடும்பத்தின் ஆணிவேர் போல் இருந்தார். இவர்கள் குடும்பம் இவ்வளவு பெரிய உயர்ந்த நிலைக்கு வருவதற்கு அவர் மட்டுமே முக்கிய காரணம். சில நடிகர்களுக்கு மட்டும்தான் இதுபோன்ற அன்பும், மரியாதையும் கிடைக்கும். இந்த அல்லு ஸ்டுடியோ லாபத்துக்காக தொடங்கப்பட்டது அல்ல என்பது உண்மை. இது அல்லு ராமலிங்கய்யாவுக்கான அஞ்சலி’ என்று பேசி நெகிழ்ந்தார்.

Related Stories: