கள்ளிப்பட்டியில் கலைஞர் படிப்பகம் அமைப்பு பணிகளை வீட்டு வசதித்துறை அமைச்சர் ஆய்வு

கோபி: கோபி அருகே கள்ளிப்பட்டியில் கலைஞர் படிப்பகம் அமைக்கும் பணியை வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம், மாவட்ட பொருளாளர் கொங்கர்பாளையம் கே.கே.சண்முகம் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஈரோடு மாவட்டம், கோபி அருகே கள்ளிப்பட்டியில் கலைஞர் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் திறந்து வைத்தார். இதைதொடர்ந்து கலைஞர் படிப்பகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று கலைஞர் படிப்பகம் அமைக்கும் பணியை வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம், பொருளாளர் கொங்கர்பாளையம் கே.கே.சண்முகம் ஆகியோர்  பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, கோபி நகராட்சி தலைவர் என்.ஆர்.நாகராஜ், தொழிலதிபர் கே.குப்புராஜ், ஒன்றிய துணை செயலாளர் கவுந்தப்பாடி சத்தியமூர்த்தி, கணக்கம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேஷ்வரன், அகம் கட்டுமான நிறுவன பொறியாளர்கள் சதீஸ், சரவணன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: