தீவு வாங்கிய பாடகர்

மும்பை: பிரபல பஞ்சாபி பாடகர் மிகாசிங், ஏராளமான இந்தி படங்களில் பாடல்களை பாடியுள்ளார். தமிழிலும் அவர் பாடியிருக்கிறார். இந்த நிலையில் மிகாசிங் சொந்தமாக வெளிநாட்டில் ஒரு தீவை விலைக்கு வாங்கியுள்ளார். இந்த தீவில் ஒரு ஏரியும் அடங்கும். மேலும் ஏரியுடன் கூடிய இந்த தீவில் 7 படகுகள் மற்றும் 10 குதிரைகளும் உள்ளன என மிகாவின் நெருங்கியவர்கள் தெரிவித்தனர். பாடகர் மிகா சிங் தான் வாங்கிய ஏரியுடன் கூடிய தீவின் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் ஏரியில் விசைப்படகில் செல்லும் காட்சிகள் உள்ளன. இருப்பினும் மிகாசிங் வாங்கிய தீவு இருக்கும் நாடு மற்றும் அதன் மதிப்பு குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

Related Stories: