நடிகர் விஷால் வீட்டை சேதப்படுத்திய வழக்கில் 4 பேர் கைது

சென்னை: நடிகரும், தயாரிப்பாளருமான விஷால் சென்னை அண்ணாநகர் 12வதுதெருவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார், இந்நிலையில், கடந்த 25ம் தேதி அன்று அவரது வீட்டினை மர்ம நபர்கள் சிலர் கற்களால் தாக்கி சேதப்படுத்தினர். இது தொடர்பாக சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது சிவப்பு காரில் வந்த மர்ம நபர்கள் வீட்டின் மீது கற்களை வீசி, சேதப்படுத்தும் காட்சி  பதிவாகி இருந்தது. இதனையடுத்து, விஷால் சார்பில், அவரின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் அண்ணாநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில், நேற்று காலை 4 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அதில், அண்ணாநகரை சேர்ந்த பிரவீன்(29), ராஜேஷ் (29), சபரீசன் (29) மனிரத்னம்(28) என்பதும், குடிபோதையில் வாட்ச்மேனுடன் ஏற்பட்ட தகராறில் ஒரு கல் விஷால் வீட்டின் கண்ணாடி உடைத்ததாக கூறினர்.இதையடுத்து, 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: