எச்ஒன்பி விசாவுக்கு விண்ணப்பித்தவர்கள் உட்பட 80 லட்சம் பேருக்கு கிரீன் கார்டு: அமெரிக்க நாடாளுமன்றம் புதிய மசோதா அறிமுகம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் எச்ஒன்பி மற்றும் நீண்ட காலமாக விசாவுக்கு காத்திருப்போர் உட்பட சுமார் 80 லட்சம் பேருக்கு கிரீன் கார்டு வழங்குவதற்கு வகை செய்யும் புதிய மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று அறிமுகம்  செய்யப்பட்டது. அமெரிக்காவில் ஆண்டு தோறும் இந்தியா உட்பட பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வேலை, கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக குடியேறுகின்றனர். அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற வேண்டுமானால் கிரீன் கார்டு பெற வேண்டியது அவசியமாகும். இதன் காரணமாக கிரீன் கார்டு கேட்டு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. எனினும் பல்வேறு காரணங்களால் கிரீன் கார்டு பெறுவதில் சிக்கல் நிலவுகிறது. இந்நிலையில், கிரீன் கார்டு வழங்குவது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் நேற்று புதிய மசோதாவை ஜனநாயக கட்சி செனட்டர்கள் 4 பேர் அடங்கிய குழு அறிமுகம் செய்தது. இந்த மசோதாவானது எச்-ஒன்பி மற்றும் நீண்ட காலமாக விசா பெற காத்திருப்போர் உட்பட சுமார் 80 லட்சம் பேர் விசா பெறுவதற்கு வகை செய்யும்.

Related Stories: