பாக். நிதியமைச்சராக இஷாக் தர் பதவியேற்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் நிதியமைச்சர் இஷாக் தர், தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளால்  கடந்த 2017ம் ஆண்டு இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். இதனிடையே, ஐநா பொதுகூட்டத்தில் கலந்து கொண்டு நாடு திரும்பிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் லண்டனில் தனது அண்ணன் நவாஸ் ஷெரீப்பை சந்தித்தார். அப்போது நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க இஷாக்கை மீண்டும் நிதியமைச்சராக்கும்படி ஷெபாசுக்கு நசாஸ் அறிவுரை கூறினார்.

இதையடுத்து, நேற்று முன்தினம் லண்டனில் இருந்து பிரதமர் ஷெபாசுடன் நாடு திரும்பிய இஷாக் நேற்று நாட்டின் நிதியமைச்சராக 4வது முறையாக பதவியேற்றார். அவருக்கு அதிபர் ஆல்வி ஆரிப் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் ஷெபாஸ் கலந்துகொண்டார். பதவியேற்கும் முன், இஷாக் பஞ்சாப் மாகாணத்தில் இருந்து மேலவை எம்பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Related Stories: